"அவன் இவன்" திரைப்பட நடிகர் ராமராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி!

0 6833

"அவன் இவன்" திரைப்படத்தில் நடித்து பிரபலமான குணசித்திர நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நடிகர் ராமராஜ், அவன் இவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ராமராஜ் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

மேலச்சாக்குளத்தில் உள்ள வீட்டில் ராமராஜின் உடலுக்கு ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments